சோகமாக பேசிய அனிதா..! குலுங்கி.. குலுங்கி.. சிரித்த ஹவுஸ்மேட்ஸ்..!

1599

பிக்-பாஸ் நிகழ்ச்சி தொடங்கி, இதுவரை 25 நாட்கள் கடந்துவிட்டது. தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொருவரின் முகமுடியும் கழன்று வருகிறது.

இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டபோது, நீங்கள் யாரை மிஸ் செய்கிறீர்கள் என்று டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் பேசிய பலரும் தங்களது மிக உருக்கமான பேச்சை பதிவு செய்தனர்.

கடைசியாக பேசிய அனிதா, தனது அம்மா மற்றும் கணவரை மிஸ் செய்வதாகவும், தனது கணவர் தன்னை கண்ணுக்குட்டி என்று கூறுவார் என்றும் தெரிவித்தார். இவ்வாறு தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்ததால், ஹவுஸ்மேட்ஸ்கள் மிகவும் எரிச்சலடைய ஆரம்பித்தனர். ஒரு கட்டத்திற்கு மேல், ஒரு குறிப்பிட்ட ஹவுஸ்மேட்ஸ்கள் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இறுதியில் பொறுமை இழந்த சம்யுக்தா, போதும் அனிதா ரொம்ப லாங்கா இருக்கு என்று கூறிவிட்டார். இதையடுத்து, தனது பேச்சை நிறுத்திக்கொண்ட அனிதா, சம்யுக்தாவிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

இந்த எபிசோடை வைத்து, பலரும் பலவிதமான மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். ஒரு சிலர், அனிதாவிற்கு ஆதரவாகவும், ஒரு சிலர் அனிதாவை கலாய்த்தும் மீம்ஸ்களை பதிவிட்டு வண்ணம் உள்ளனர்.

Advertisement