அஞ்சாலை மீன் பற்றி தெரியுமா? கடித்தால் “லெக் பீஸ்” காலி!

1225

கடல் என்பது பூமிக்குள் இருக்கும் இன்னொரு பூமி, இதன் மாயம் கண்டவர் உலகில் யாரும் இல்லை இவ்வாறெல்லாம் கவிஞர்கள் கடலை பற்றி வர்ணித்து வருகின்றனர். கடலுக்குள் எத்தனை விதமான உயிரினங்கள் உள்ளது என்று விஞ்ஞானிகள் இன்னும் ஆராய்ச்சிகள் செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.

இவ்வாறு பல்வேறு மாயங்கள் நிறைந்த கடலில் எந்த அளவிற்கு அழகான உயிரினங்கள் உள்ளதோ, அந்த அளவிற்கு ஆபத்தான உயிரினங்களும் உள்ளது. அப்படி ஆபத்து நிறைந்த ஒரு உயிரினம் தான் இந்த அஞ்சாலை மீன்.

இந்த மீனின் தலைப்பாகமும், உடலும் பாம்பு போன்ற அமைப்பை பெற்றிருக்கும். கடலில் வாழும் மற்ற உயிரினங்களுக்கு மட்டுமல்லாது, மீனவர்களுக்கும் அதீத ஆபத்தை ஏற்படுத்தும் இந்த அஞ்சாலை மீன்.

இந்த வகை மீன்களின் வாய் பெரிதாகவும், பற்கள் கூர்மையானதாகவும் இருப்பதால், இது கடித்தால் வாய்க்குள் சிக்கும் சதைப்பகுதி முழுவதையும் தனியாக எடுத்து விடும் அளவிற்கு பலம் படைத்தவை.

ஆபத்து நிறைந்த அஞ்சாலை மீன்கள் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் வலையில் தப்பித்தவறி சிக்கி விட்டால் மிகவும் ஜாக்கிரதையாக இதனை வலையில் இருந்து எடுத்து மீண்டும் கடலில் விட்டு விடுவார்கள். குறைந்த ஆழம் கொண்ட கடல் பகுதியில் வாழும் அஞ்சாலை மீன்கள், சில நேரங்களில் கடல் அலையுடன் சேர்ந்து கரை ஒதுங்குவதும் உண்டு.

இவ்வாறு நேற்று காலை தனுஷ்கோடி தென்கடல் பகுதியில் உயிருடன் ஒரு அஞ்சாலை மீன் கரை ஒதுங்கியது. அந்த மீனை ஆர்வத்துடன் பார்த்த சுற்றுலாப்பயணிகளும், பொதுமக்களும் தங்களின் மொபைல் போன்களில் படம்பிடித்து சென்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of