திமுக மீது முதல்வர் அவதூறு செய்திகளை பரப்புவது ஏன்? – ஆ.ராசா

328
Raja

தன்னை காப்பாற்றிக்கொள்ளவே தி.மு.க. மீது முதலமைச்சர் பழனிசாமி அவதூறு செய்திகளை பரப்பி வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் இதுவரை விடப்பட்ட டெண்டர் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என்றும், நெடுஞ்சாலை டெண்டர் புகாரில் குற்றமில்லை என்றால் தைரியமாக சி.பி.ஐ. விசாரணையை சந்திக்க தயாரா எனவும் கேள்வி எழுப்பினார்.

முதலமைச்சர் பழனிசாமி அரசியல் அச்சம் காரணமாக தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக, தி.மு.க. மீது அவதூறு செய்திகளை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார்.