உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்ற அன்னா ஹசாரே!

86

மத்திய பிரதேச அரசு கோரிக்கைகளை ஏற்றதால் ஏழு நாட்களாக மேற்கொண்ட வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அன்னா ஹசாரே வாபஸ் பெற்றார்.லோக்பால், லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள தமது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் கடந்த மாதம் 30ஆம் தேதி அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

ஏழு நாட்களாக உண்ணாவிரதம் இருந்த நிலையில் அவரது உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்ட்ரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், அன்னா ஹசாரேவை நேரில் சந்தித்து லோக்பால், லோக் ஆயுக்தா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமென உறுதி அளித்தார்.

இதையடுத்து அன்னா ஹசாரே பழச்சாறு குடித்து, தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.