இடிந்து விழுந்த கட்டிடம் – அலறியடித்து ஓட்டம் பிடித்த வங்கி ஊழியர்கள்

401

சென்னை அண்ணா சாலையில் உள்ள LIC கட்டிடம் அருகே, சுமார் 60 ஆண்டுகளான பழமையான கட்டிடத்தில் ஆந்திரா வங்கியின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திடீரென கட்டிடத்தின் முன்பக்கம் இடிந்து விழுந்தது. இதனால் வங்கியில் இருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், மேற்கொண்டு எந்தவித இடர்பாடுகளும் ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும், அக்கட்டிடத்தில் தொடர்ந்து வங்கி கிளை இயங்க அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of