அண்ணா பல்கலை., துணைவேந்தர் திடீர் பதவி விலகல்

423

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த சூரப்பா தனது பதவியிலிருந்து விலகுவதாக உயர்கல்வித்துறையிடம் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வை நடத்துவதால் நிர்வாக சிக்கல் ஏற்படுவதாகவும், மாணவர்களின் கோரிக்கைகளை செயல்படுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் கூறி சூரப்பா பதவி விலகியுள்ளார்.

மேலும் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் சூரப்பாவின் பதவி விலகலை உயர்க்கல்வித்துறை ஏற்றுக்கொண்டுள்ளது.

சூரப்பாவிற்கும் உயர்கல்வித்துறை செயலருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதால் இந்த திடீர் விலகல் இருக்கலாம் என தகவல்கள் வருகின்றன.

துணை வேந்தரின் இந்த திடீர் விலகலால் எதிர்வரும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை பொறியியல் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் நடத்த வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of