மீண்டும் தொடங்குகிறதா ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு??

223

ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தில் கதாநாயகியாகியாக நயன்தாரா நடிக்கிறார். இதனிடயே படப்பிடிப்பில் பணியாற்றிய சிலருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்ட நிலையில் படப்பிடிப்பு தடைபட்டது. எனவே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் மார்ச் 15-ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து அரசியல் பணிகளில் தீவிரமாக பணியாற்றி வந்த ரஜினி, மருத்துவர்களின் அறிவுரைப்படி அரசியல் கட்சித் தொடங்கப்போவதில்லை என அறிவித்தார்.

இந்நிலையில் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு பிப்., இறுதி அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்தப் படப்படிப்பு ஈவிபி ப்ளிம் சிட்டி, கோவை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் நடைபெற இருப்பதாகத் தெரிகிறது.  

Advertisement