அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் பார்சல்…, பேராசிரியரை கலாய்த்து வீடியோ வெளியிட்ட மாணவர்களின் நிலை?

189

தமிழ் திரையுலகில் என்றும் நீங்கா இடம் பிடித்தா நகைச்சுவை நடிகர்களில் வடிவேலும் ஒருவர். இவர் படத்தில் நடித்த பல நகைச்சுவை காட்டிகள் கொண்டே மீம் கிரியேட்டர் பல நகைச்சுவை போஸ்டர்களை தயார் செய்கின்றனர்.

இந்நிலையில், சேலத்தை சேர்ந்த அரசு கல்லூரி மாணவர்கள் பேராசிரியர் பாடம் நடத்துவதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்த மாணவர்கள், அதை வடிவேலுவின் ஊத்தாப்பம் நகைச்சுவைக் காட்சியின் ஆடியோவுடன் இணைத்து அதை சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.

இதுகுறித்து, கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுக்கப்பட்டது அந்த பேராசிரியர். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழ்துறையைச் சேர்ந்த மாணவர்கள் 3 பேரை ஒரு மாதத்திற்கு கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

இந்த கல்லூரி மாணவர்கள் விளையாட்டாக செய்த காரியம் அவர்களுக்கே வினையாக மாரிவிட்டது.