அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..! ரசிகர்கள் கடும் அதிர்ச்சி..!

1251

தர்பார் படத்திற்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு, டி.இமான் இசையமைத்து வருகிறார்.

எப்போதோ தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு, பெருந்தொற்று பரவல் காரணமாக தடைப்பட்டது. இதையடுத்து, மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், படப்பிடிப்பில் கலந்துக் கொண்டவர்கள் சிலருக்கு பெருந்தொற்று உறுதியானதால், மீண்டும் தடைப்பட்டது.

இந்நிலையில், அண்ணாத்த படக்குழுவினர் தங்களது டுவிட்டர் பக்கத்தில், படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதில், வரும் நவம்பர் 4-ஆம் தேதி அன்று அண்ணாத்த படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர். இந்த வருட இறுதியில் தான் படம் வெளிவரும் என்று செய்தியை அறிந்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Advertisement