அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

7232

7.5 உள்ஒதுக்கீடு படி, மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு, மாணவர்களுக்கு, அரசு மருத்துவ கல்லூரிகளிலும், தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் இடங்கள் ஒதுக்கப்பட்டன.

ஆனால் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர்கள், ஏழ்மை காரணமாக பணம் கட்ட முடியாது என வெளியேறினர். இதன் பின்னர் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின், கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

அரசின் இந்த தாமதமான அறிவிப்பால், தனியார் மருத்துவக் கல்லூரியில் பணம் கட்ட முடியாமல் வெளியேறிய அரசு  பள்ளி மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியனர்.

இந்நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரியில் பணம் கட்ட முடியாமல் வெளியேறிய அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கட்டணம் செலுத்த முடியாமல் வெளியேறிய மாணவர்கள் மீண்டும் மருத்துவப்படிப்பில் சேர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 2 நாட்களில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement