இம்மாதமே மீண்டும் ஒரு Cyclone?

1661

வங்கக்கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது வரும் 30 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் மூன்றாம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை இதுவரை 34 சென்டிமீட்டர் பெய்திருக்க வேண்டிய நிலையில், 29 சென்டிமீட்டர் வரை மட்டுமே பெய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் மாத நிலவரப்படி 5 சென்டிமீட்டர் குறைவாக வடகிழக்குப்பருவமழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement