சென்னையிலும் எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட மற்றொரு பெண்

328

சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து தற்போது சென்னையிலும் பெண் ஒருவருக்கு இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டது. ஒரு சில மாதங்களுக்கு பின்னர் அதாவது கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி எடுக்கப்பட்ட பரிசோதனையில் தான் அவருக்கு எச்.ஐ.வி இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக சம்மந்தப்பட்டவர்களிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கருணை மனு கொடுத்தும் எந்த பதிலும் வரவில்லை எனவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர், மாங்காடு அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் புகார் அளித்துள்ளதாகவும் இதற்கான ஆதாரங்களையும் அவர் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது இந்த பெண்ணிற்கு கடந்த செப்டம்பர் 15ம் தேதி குழந்தை பிறந்து 3 மாதங்கள் ஆகியுள்ளன. இதுவரை அந்த குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று எதுவும் ஏற்படவில்லை. ஆனால் தொடர்ந்து ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், குழந்தைக்கு ஒன்றரை வயது ஆன பிறகே எச்.ஐ.வி தொற்று ஏற்ப்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of