தஞ்சை பெரியகோவிலில் தொன்மையான சிலைகள் குறித்து ஏ.டி.எஸ்.பி ராஜாராம் தலைமையில் சோதனை

666

தஞ்சை பெரியகோவிலில் தொன்மையான சிலைகள் குறித்து ஏ.டி.எஸ்.பி ராஜாராம் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது.

தஞ்சை பெரியகோவிலில் உள்ள அர்த்த மண்டபத்தில்தான் அனைத்து சிலைகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய தொல்லியல் துறை இயக்குநர் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அர்த்த மண்டபத்தில் ஆய்வு செய்தனர்.

தஞ்சை பெரியகோவில் மத்திய தொல்லியல் துறையின் கீழ் இயங்கி வருவதால், மத்திய தொல்லியல் துறை இயக்குநரும் ஆய்வில் ஈடுபட்டர்.

பல தொன்மையான சிலைகள் மாற்ற வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தொல்லியல் துறை அதிகாரிகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் என 20க்கும் மேற்பட்டோர் தஞ்சை பெரியகோவிலில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 

Advertisement