குமரியில் பாஜகவிற்கு எதிராக நோட்டீஸ் பிரச்சாரம் – 8 பேர் கைது

637

கன்னியாகுமரியில் பாஜகவுக்கு எதிராக நோட்டீஸ் பிரச்சாரம் செய்தவர்களை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சார்பில்  பாஜக வுக்கு எதிராக நோட்டீஸ் விநியோகம் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக வடசேரி பேருந்து நிலையத்தில் அந்த அமைப்பினர் நோட்டீஸ் விநியோகம் செய்யும்போது காவல் துறையினரால் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையின் பெரும் அலைக்கழிப்புக்கு பின்னர் இரவு 10 மணி அளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் அளித்த நோட்டீஸில் எந்தத் தவறும் இல்லை என்று சொந்த ஜாமீனில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of