தேச துரோக வழக்கில் வைகோ குற்றவாளி…! – நீதிமன்றம் அதிரடி..! – MP பதவிக்கு ஆபத்தா?

622

தேசத் துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை எழும்பூரில் கடந்த 2009 ம் ஆண்டு நடைபெற்ற ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். விழாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதால் வைகோ மீது தேச துரோக வழக்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

விசாரணை நிறைவடைந்ததால், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை சிறப்பு நீதிமன்றம் வைகோ குற்றவாளி உத்தரவிட்டுள்ளது. மேலும், 10,000 ரூபாய் அபராதமும், 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

MP பதவிக்கு ஆபத்தா?

இந்த வழக்கின் விசாரணையில் வைகோ குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் மாநிலங்களவை எம்.பி ஆவதில் தடையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதிமுக தொண்டர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of