‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிடேன்’ இணையத்தை கலக்கும் அனுஷ்கா

1067

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக தன்னுடைய முத்திரையை பதித்தவர் அனுஷ்கா. இவர், இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தன்னுடைய உடல் எடையை அதிகரித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பின் தன்னுடைய உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டார்.இருப்பினும் அவரால் பழைய தோற்றத்திற்கு முழுமையாக வரமுடியவில்லை. ‘பாகுபலி’ படத்தில் மிகவும் ஒல்லியாக காண்பிக்கப்பட்டார். அதில் இவரை ஒல்லியாக காட்டுவதற்காகவே ஸ்பெஷல் எபெக்ட் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. அப்படத்தைத் தொடர்ந்து ‘சாஹோ’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் உடல் எடையை குறைப்பதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பிய பின் அனுஷ்கா புதிய போட்டோ சூட்ஒன்றை நடத்தி, அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் இப்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement