என்னை எதுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..!

1899

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில், கிங்ஸ் லெவன் பாஞ்சாப் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பேங்களூர் அணியும் மோதின. இந்த போட்டியின்போது, பாஞ்சாப் அணியின் கோப்டன் கே.எல்.ராகுலின், இரண்டு கேட்ச்களை விராட் கோலி தவறவிட்டார்.

மேலும், பேட்டிங் செய்தபோது, 1 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அந்த அணியும் தோல்வியடைந்தது. அப்போது, கமெண்ட்ரி செய்துக்கொண்டிருந்த கவாஸ்கர், லாக் டவுன் சமயத்தில் விராட் கோலி, அனுஷ்கா சர்மா பவுலிங்கைத்தான் ஆடி பயிற்சி எடுத்துக் கொண்டார் போலும் என்று நகைச்சுவையாகக் கூறினார்.

இந்த கருத்துக்கு பதிலடி தரும் வகையில், அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மிஸ்டர் கவாஸ்கர் உங்கள் கருத்து ரசனைகெட்டதாக இருக்கிறது என்பது உண்மையே என்று தெரிவித்தார்.

மேலும், எப்போது என் பெயரை கிரிக்கெட் விஷயத்தில் இழுப்பது நிறுத்தப்படும் என்று கூறிய அவர், இந்த ஜெண்டில்மேன்களின் ஆட்டத்தில் உங்கள் பெயர் மிகப்பெரிய இடத்தில் உள்ளது என்றும் சாடியிருந்தார்.