பழச்சாறுக்கு கோடிக்கணக்கில் செலவானது எப்படி?- அப்பல்லோ விளக்கம்

416

கிச்சையின்போது, ஜெயலலிதா பழரசம் மட்டுமே அருந்தியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

jeyalalitha juice
“நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் செவ்வாய்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சிகிச்சையின்போது ஜெயலலிதா பழரசம் மட்டுமே அருந்தினார். அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் 3 வேளையும் உணவு வழங்கப்பட்டதால் தான் உணவு கட்டணம் ரூ.1.15 கோடி செலவானது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு மருத்துவர்கள் ஆஜராகாத விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. ஆணையத்தின் செயல்பாட்டால் அப்பல்லோ, குற்றச்சாட்டுக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சையின் போது, அவருக்கு வழங்கப்பட்ட உணவு, அது தொடர்பான கணக்கு விவரங்கள் ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் வெளியானது எப்படி என அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உயர்நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதனையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of