ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடையா? அப்போலோ தொடரும் வழக்கு

119

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி அப்பலோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில்,

மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை குறித்து விசாரிக்க நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்கள் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, வழக்கில் தீர்வு காணும்வரை மருத்துவ விவகாரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கு வருகின்ற 11 ஆம் தேதி நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வரவுள்ளது.