ஜெயலலிதா உடல்நலம் குறித்து அப்போலோ மருத்துவமனை தான் அறிக்கை வெளியிட்டது

737

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரது உடல்நலம் குறித்து அப்போலோ மருத்துவமனை தான் அறிக்கை வெளியிட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் அரசு பொருட்காட்சியை திறந்து வைத்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார்.

இதைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, பொதுமக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்று தெரிவித்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரது உடல்நலம் குறித்து அப்போலோ மருத்துவமனை தான் அறிக்கை வெளியிட்டது என்றும் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of