தமிழக காங். கமிட்டியின் தலைவராக கே எஸ் அழகிரி நியமனம்!

465

கடந்த சட்டமன்ற தேர்தல் ஏற்பட்ட தோல்வியை அடுத்து அப்போது தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.அதற்கு அடுத்ததாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்டது முதலே பல்வேறு குற்றச்சாட்டுகளை ஈவிகேஎஸ் இளங்கோவன், சிதம்பரம் ஆதரவாளர்கள் தெரிவித்து வந்தனர்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதையடுத்து மாநிக கட்சி தலைமையில் மாற்றங்களை மேற்கொள்ள அகில இந்திய தலைமை மேற்கொண்டுள்ளது. சமூக, மண்டல ரீதியிலும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கே எஸ் அழகிரி தமிழக காங்கிரஸ் தலைவராகவும், வசந்தகுமார், மயூரா ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், ஜெயக்குமார் ஆகியோர் செயல் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of