நெருங்குகிறது நிவர்.. தயாராகுகிறது மீட்பு குழு

5643

தமிழகத்தை நோக்கி வரும் நிவர் புயல், கடலூரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அங்கு தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரக்கோணத்தில் இருந்து 122 பேரிடர் மீட்புக்குழுவினர் முதற்கட்ட வருகை தந்துள்ளனர்.

நிவர் புயல் வரும் 25ம் தேதி காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்க இருப்பதால் கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 200 மில்லி மீட்டர் மழை பெய்யலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

கடலூரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடலூர் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதால் கடலில் உள்ள மீனவர்களை விரைந்து கரை திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயலின் போது சேதம் அடையாமல் இருக்க மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அரக்கோணத்தில் இருந்து 122 பேரிடர் மீட்புக்குழுவினர் 6 குழுக்களாக கடலூருக்கு வருகை தந்துள்ளனர்.

Advertisement