கடைமடை பகுதி பாசனவாய்க்கால்களை தூர் வாரும் பணி ஏறக்குறைய நிறைவு

548

கடைமடை பகுதிவரை பாசனவாய்க்கால்களை தூர் வாரும் பணி ஏறக்குறைய நிறைவேற்றபட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூரை அடுத்த வாங்கல் பகுதியிலுள்ள தனியார் கூட்டரங்கில் பாப்புலர் முதலியார் வாய்க்கால் விஸ்தரிப்பு குறித்து விவசாயிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விவசாயிகளிடையே சிறப்புரையாற்றினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கைகையான பாசன வாய்க்காலை தூர் வாரி கடைமடை பகுதி வரை தண்ணீர் கொண்டு செல்வது ஏறக்குறைய நிறைவேற்றபட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5-ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of