உலகின் டாப் 10 இசை அமைப்பாளருக்கான பட்டியலில் ஏ.ஆர் ரகுமான் 7-வது இடம்

1912

உலகின் டாப் 10 இசை அமைப்பாளருக்கான பட்டியலில் இந்தியாவின் பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஏ.ஆர் ரகுமான் 7-வது இடத்தை பிடித்துள்ளது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவின் “ஆஸ்கார் நாயகன்” என்றழைக்கப்படும் ஏ.ஆர் ரகுமான் இசையுலகில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். “எல்லா புகழும் இறைவனுக்கே” என்று அடிக்கடி கூறும் இவர், மேலும் ஒரு புகழை தன் வசப்படுத்தியுள்ளார்.

உலகின் டாப் 10 இசை அமைப்பாளரின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில், லண்டனை சேர்ந்த “தி பீட்டல்ஸ்”முதல் இடத்தையும், அமெரிக்காவை சேர்ந்த “பிங் க்ராஸ்பி” 2வது இடத்தையும், “எல்விஸ் பிரஸ்லே” 3 வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த டாப் 10 வரிசையில் ஏ.ஆர் ரகுமான் 7வது இடத்தை பிடித்துள்ளது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.