A.R. Rahman அணிந்திருந்த Mask-ஐ கவனிச்சீங்களா..?

1355

இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அண்மையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின் எடுத்த புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் தான் ஒரு சுவாரசியமான விஷயம் அடங்கியிருக்கு. ஆம், அவர் அணிந்திருந்த மாஸ்க் தான் அது.

கடந்த ஆண்டு இறுதியில் L.G நிறுவனம் Puricare Wearable Air Purifier-ஐ அறிமுகம் செய்தது. இதனை தான் அவர் அணிந்துள்ளார். இதை மாஸ்க்-னு சொல்றத விட ஒரு குட்டி Air Purifier-னு தான் சொல்லனும். காற்று மாசுபாட்டில் இருந்து தப்ப இது பயன்படுத்தப்படுகிறது.

செயல்பாடுகள் :

காற்றை வடிகட்டுவதற்காக 2 Filter-கள் அமைக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு சிரமமும் இல்லாமல் சுவாசிக்க குட்டி Fan உள்ளது.

எப்படி சுவாசிக்கிறோம் என்பதை கண்காணிக்க Respiratory Sensor இருக்கிறது.

இவை அனைத்தும் சரியாக செயல்பட ஒரு குட்டி 820 mAh பேட்டரி இருக்கு. 2 மணி நேரம் சார்ஜ் செய்தால், இதனை அதிகபட்சமாக 8 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

Advertisement