டெல்லியில் அமெரிக்க அதிபர் பங்கேற்கும் நிகழ்ச்சி – அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயர் நீக்கம்

635

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடன், அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும், இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாளை மறுநாள் இந்தியா வரும் அவர், செவ்வாய்கிழமையன்று, தெற்கு டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளை பார்வையிட உள்ளார்.

டெல்லி அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தை ஆய்வு செய்வதோடு, மாணவர்களுடனும் மெலனியா டிரம்ப் உரையாட உள்ளார்.

இந்தநிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இருந்து இருவரும் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், இந்த நடவடிக்கைக்கு பாஜக அரசின் காழ்ப்புணர்ச்சியே காரணம் என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of