டெல்லி முதல்வராக 3-வது முறையாக பதவியேற்றார் கெஜ்ரிவால்..!

201

தலைநகர் டெல்லியின் முதல் மந்திரியாக மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்றார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கிடையே, டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிப்ரவரி 16-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் முதல் மந்திரி பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. காலை 10 மணியளவில் நடைபெற்ற விழாவில் கெஜ்ரிவால் டெல்லி முதல்-மந்திரியாக தொடர்ந்து 3-வது முறையாக பதவியேற்றார். அவருக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 6 மந்திரிகள் பதவியேற்றனர்.

இந்த விழாவில் ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர்கள் முதல் டாக்டர்கள் வரை என்று டெல்லியின் கட்டமைப்புக்கு உதவி வரும் பல்வேறு துறைகளை சேர்ந்த தனிநபர்கள் 50 பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of