டிவிட்டர் டிரென்டிங்கில் தலைவி..! எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா?

632

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

மதராஸப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா போன்ற திரைப்படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய், தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் அண்மையில் வெளிவந்து ரசிகர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளானது. ஜெயலலிதாவாக நடித்திருந்த கங்கனாவை கிண்டல் செய்தும் சமூக வலைதளங்களில் பரவியது. இதானால் படக்குழுவினர் மிகுந்த கவனத்துடன் படத்தை இயக்கி வந்தனர்.

இந்நிலையில், இன்று எம்.ஜி.ஆர் பிறந்த தினம் என்பதால் தலைவி படத்தில் எம்.ஜி.ஆர். ஆக நடிப்பவரின் படத்தை வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியுள்ளது படக்குழு.

எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிப்பவர் அரவிந்த் சாமி, இது குறித்து அரவிந்த சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் எம்.ஜி.ஆர்-ஆக வேடமிட்டுருக்கும் அவரின் படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமி நடித்த ஒரு பாடலின் விடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of