மீண்டும் இணையும் அரவிந்தசாமி, மதுபாலா ஜோடி | Aravindsamy | Madhubala

564

அரவிந்தசாமி, இயக்குனர் மணிரத்னம் ரோஜா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு தந்த ஒரு சாக்லேட் ஹீரோ. பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்த பிரபலமான இவர், சில வருடங்கள் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் மணிரத்தினத்தின் கடல் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமி, தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து திரையுலகை அவர் பக்கம் திரும்பவைத்தார்.

இந்நிலையில் அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’, கள்ளபார்ட் ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தழுவி உருவாகும் ‘தலைவி’ படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமி நடித்து வருகிறார். இந்நிலையில் தலைவி படத்தில் மதுபாலா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே 27 ஆண்டுகளுக்கு முன் வெளியான ரோஜா படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of