கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டில் கைதான பேராயர் முல்லக்கல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

776

கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டில் கைதான பேராயர் முல்லக்கல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

ஜலந்தர் பேராயராக இருந்த ஃபிரான்கோ முல்லக்கல் கேரளாவுக்கு வந்த போது 2014 முதல் 2016 வரை தன்னை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி புகார் கூறியிருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக போலீசாரால் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் முலக்கல் திருப்புனித்துராவில் ((Tripunithura)) உள்ள கேரள குற்றப்பிரிவு காவல் அலுவலகத்தில் ஆஜராகினார். அவரிடம் கடந்த 3 நாட்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ஃபிரான்கோ முல்லக்கல் நெஞ்சுவலி காரணமாக கோட்டையும் அரசு கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement