தற்கொலைக்கு முயற்சி செய்த விவசாயி! கண் கலங்க வைத்த நிகழ்வு!!

173

அரியலூர் மாவட்டம் வாழைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்-தவமணி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடியிருக்கும் இடத்திற்கு அருகே கோயிலுக்கு சொந்தமான இடம் ஒன்றுள்ளது.

இந்நிலையில் முருகன் குடியிருக்கும் இடமும் கோயிலுக்கு சொந்தமான இடம் என அப்பகுதியைச் சேர்ந்த சிலர் இவரிடம் தகராறு செய்துள்ளனர்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து என்னுடைய இடத்தை மீட்டு தர வேண்டும் என முருகன் கடந்த வருடம் மாவட்ட ஆட்சியரிடமும்,கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரிடமும் மனு அளித்துள்ளார்.

ஆனால் அவர்கள் அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மணமுடைந்த முருகன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போது அருகிலிருந்தவர்கள் 4 பேர் மீதும் தண்ணீரை ஊற்றி, அவர்களை காப்பாற்றியுள்ளனர். இதனிடையே முருகனின் குழந்தைகள் இரண்டு பேரும் அழுது கொண்டிருந்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் இருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது.