தேர்தலை புறக்கணிக்கும் கிராமம் – காரணம் என்ன தெரியுமா?

263

அரியலூர் அருகே பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால் கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக ஜெயங்கொண்டத்தை சுற்றி உள்ள செங்குந்தபுரம், தேவனூர் உள்ளிட்ட15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து அரசு மற்றும் விவசாய நிலங்கள் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டது.

இதனிடையே இழப்பீடு தொகை போதவில்லை என விவசாயிகள் வழக்கு தொடுத்ததையடுத்து இதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, அதன் விசாரணையில் ஏக்கர் ஒன்றுக்கு15 லட்சம் முதல் 20 லட்சம் வரை இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இழப்பீடு இதுவரை வழங்கவில்லை என்பதால். இதனை மத்திய மாநில அரசுகளுக்கு உணர்த்தும் விதமாக, வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

உரிய இழப்பீடு வழங்கி திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினால் மட்டுமே தேர்தலில் வாக்களிப்போம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of