நான் சன்னி லியோன் இல்லைங்க… கதறும் வாலிபர்!

762

சன்னி லியோன் வெளியிட்ட போன் நம்பரால் இளைஞர் ஒருவர் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.

அடல்ட்ஸ் ஒன்லி திரைப்படங்கள் மற்றும் பார்ன் வீடியோக்கள் மூலமாக பிரபலமான சன்னி லியோன். தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில்  ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்த சன்னி லியோன் ‘வீரமாதேவி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு உலக அளவில் ரசிகர்கள் ஏராளம். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சன்னி லியோன் நடித்திருந்த அர்ஜுன் பாட்டியாலா படம் திரைக்கு வந்தது. அர்ஜுன் பாட்டியாலா படத்தின் ஒரு காட்சியில் சன்னி லியோன் ஒரு போன் நம்பரை கூறியுள்ளார்.

இந்த போன் நம்பர் சன்னி லியோனுடையது என்று தவறாக புரிந்துகொண்ட ரசிகர்கள் தொடர்ந்து போன் செய்துள்ளனனர். சுமார் 400-க்கும் அதிகமான போன் கால்கள் தொடர்ச்சியாக வந்ததால் அந்த நம்பருக்குச் சொந்தமான புனித் அகர்வால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளார் புனித் அகர்வால். ரோஹித் ஜுஹ்ராஜ் சௌகான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அர்ஜுன் பாட்டியாலா’ படத்தில் தில்ஜித், கிரித்தி சனோன், வருண் சர்மா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகை சன்னி லியோனும் நடித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of