சென்னையில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! பிறந்த நாள் இறந்த நாளானது…

199

சென்னை கீழ்ப்பாக்கம் ஐ.ஜி. அலுவலகத்தில் அதிகாலை ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.காவலர் மணிகண்டனின் உடல், பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துமனையில் வைக்கப்பட்டுள்ளது. எதற்காக, மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இதேபோல், கடந்தாண்டு அருண்ராஜ் (26) என்ற ஆயுதப்படை பிரிவு காவலர் மெரினாவில் ஜெயலலிதா சமாதியில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டார். பின்னர், நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மன உளைச்சலில் இருந்து வந்தது தெரியவந்தது.

2016 டிசம்பர் மாதம் சென்னையை அடுத்த பரங்கிமலை இணை ஆணையர் அலுவலகத்தில் ஆயுதப்படைப் பிரிவு காவலர் கோபிநாத் (23) துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ஆயுதப்படை பிரிவு காவலர்கள் மனஉளைச்சலில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. வார விடுப்பு மற்றும் பணிக்கு இடையே ஓய்வு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தது நினைவிற்குரியது.

முன்னதாக, மன அழுத்தம் குறைப்பதற்கு வாரந்தோறும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. யாருக்கேனும் குறை இருந்தால் எங்களிடம் வாய்மொழியாகவும் எழுத்து பூர்வமாகவும் டிஜிபியிடம் நேரடியாகவும் புகார் தெரிவிக்கலாம் என்று ஆயுதப்பிரிவு துணை ஆணையர் தெரிவித்திருந்தார்.