காயிலாங் கடைக்கு வந்த ராணுவ துப்பாக்கி! ஊழியர்களுக்கு நடந்த சோகம்!

554

மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் கரே கர்ஜூன் என்ற கிராமத்தில் பழைய இரும்பு கடை செயல்படடு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை அந்த இரும்புக்கடைக்கு லோடு வந்துள்ளது.

அந்த லோடில் உள்ள பொருட்களை தனியாக பிரித்து வைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அதில், விற்பனைக்கு வந்த ராணுவ துப்பாக்கி ஒன்றை எடுத்து, உலோகத்தை மட்டும் தனியாக பிரித்தெடுக்க முயற்சித்துள்ளனர்.

அப்போது அதில் ஏற்கெனவே இருந்த துப்பாக்கிக் குண்டு எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது. அப்போது அருகில் இருந்த இருவர் மீது குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of