ராணுவ ஜவான் கடத்தல். ஜம்முவில் பதட்டம் ?

233
jammu9.3.19

ஜக்லி(JAKLI) என்று அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீர் காலாற்படையில் (Jammu & Kashmir Light Infantry)ஜவானாக பணியாற்றி வருபவர் திரு. முகமத் யாசீன் பட், இவர் நேற்று கியாஜிபுரா என்ற இடத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து கடத்தப்பட்டுள்ளார்.

இந்த மாத இறுதி வரை விடுப்பில் வந்திருக்கும் முகமத் தனது வீட்டில் இருந்தே கடத்தப்பட்டுள்ளது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்ற ஆண்டு புல்வாமா பகுதியில் “அவுரங்ஸிப்” என்ற ஜவான் இதே போல ஈத் பெருநாளுக்கு வீட்டிற்கு சென்றபோது கடத்தப்பட்டார், ஒரு மாதம் கழித்து குண்டுகள் துளைத்த அவர் உடல் கண்டெடுக்கப்பட்டது வருத்தத்திற்குரியது.