பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் பலி

361

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியின் படாலிக் செக்டாரில் ராணுவ வீரர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது  திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர் நாயக் குல்தீப் சிங் படுகாயம் அடைந்தார்.

சக வீரர்கள் அவரை மீட்டு ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார் என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.