கன்னி வெடியை அகற்ற முயன்ற ராணுவ வீரர் மரணம்!

591

இந்திய ராணுவத்தின் பொறியியல் பிரிவில் பணியாற்றி வந்தவர் டேராடூனைச் சேர்ந்த மேஜர் சித்ரேஷ் பிஸ்த் (வயது 31).காஷ்மீரின் உள்ள நவுசேரா செக்டார் பகுதியில் இந்திய பாகிஸ்தான் எல்லைக் கோடான அருகே கண்ணி வெடிகளை செயலிழக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது எதிர்பாராத நேரத்தில் வெடித்துச் சிதறியதில் மேஜர் சித்ரேஷ் பரிதாபமாக பலியானார். அவருடன் இருந்த மற்றொரு ராணுவ வீரர் காயத்துடன் உயிர் தப்பினார்.

மேஜர் சித்ரேஷ் பிஸ்துக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் அவர் பலியானது அவரது குடும்பத்தினரையும், நண்பர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேஜர் சித்ரேஷின் சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்தின்  கவர்னர் ராணி மவுர்யா, முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ஆகியோர் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர். மிகவும் துனிச்சலான வீரரான மேஜர் சித்ரேஷ் நாட்டிற்காக உட்சபட்ச தியாகத்தை செய்துள்ளதாக போற்றினர்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of