போனில் அழைத்த மருமகன்..! பதறியடித்துக்கொண்டு வந்த ஏழுமலை..! இறுதியில் பேத்தி சொன்ன பகீர் தகவல்..!

906

திருவண்ணாமலை மாவட்டம் போளுர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. 65 வயதாகும் இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில் 3-வது மகளின் பெயர் ரேணுகா. இந்நிலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு ரேணுகாவிற்கும், கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த நாகேந்திரன் என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றது.

நாகேந்திரன் குஜராத்தில் ராணுவ வீரராக பணியாற்றியவர். இதனால், கல்யாணமாகிய கையோடு, ரேணுகா குஜராத்திற்கு சென்றுள்ளார். கல்யாணமாகிய சில வருடங்களில், யோகிஸ்ரீ, தான்யஸ்ரீ என்ற 2 மகள்கள் பிறந்தனர்.

இந்நிலையில் திடீரென சேகர், அவரது மாமனார் ஏழுமலைக்கு போனில் அழைப்பு விடுத்துள்ளார். அதில், உங்கள் மகள் ரேணுகா சிலிண்டர் வெடித்து தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளார் என்று கூறி விட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதையடித்து பதறியடித்துக்கொண்டு, ஏழுமலை குஜராத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்று பார்ப்பதற்குள், ரேணுகா உயிரிழந்துள்ளார். இதையடுத்து, உடலை நேற்று அதிகாலை கிருஷ்ணாபுரத்துக்கு ஏழுமலை கொண்டு வந்துள்ளார். இவ்வாறு இருக்க திடீரென ரேணுகாவின் மகள் யோகிஸ்ரீ, அப்பா அம்மாவின் மீது மண்எண்ணெய் ஊற்றி தீவைத்ததாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஏழுமலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், தன் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், இதனால் மீண்டும் ஒரு முறை என் மகளின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதாவிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of