அர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்! வைரலாகும் பரபரப்பு வீடியோ!

745

ஜிம் செல்பவர்கள் அனைவருக்கும் முன்னோடியாக திகழ்பவர் அர்ணால்ட். இவர் உடற்பயிற்சியில் ஈடுபட்டு பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். மேலும், ஹாலிவுட் திரையுலகிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் ஆவார்.

இவரின் டெர்மினேட்டர், பிரிடேட்டர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் இன்றளவும் சினிமா ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. 71-வயதாகும் அர்ணால்ட் காலிபோர்னியாவின் ஆளுநராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் இவர் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அப்போது, அங்கு அவரை மர்ம நபர் ஒருவர் பறந்து வந்து எட்டி உதைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து அர்ணால்ட் அவரது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் செய்துள்ளார். அதில்,

“உங்களின் அக்கறைக்கு நன்றி. ஆனால் அதைப்பற்றி எதுவும் கவலைப்பட வேண்டாம். எப்போதும் நடப்பதை போல, நான் முதலில் கூட்டத்தில் இருந்தவர்கள் மேலே விழுந்தனர் என்று நினைத்தேன்.

அந்த விடியோவை பார்த்த பிறகு தான் தெரிந்தது, என்னை யாரோ ஒருவர் உதைத்துள்ளார் என்று. நல்லவேளை என்னுடைய ஸ்னேப்சேட்-ல அவர் குறிக்கிடவில்லை.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of