பணம் வைத்து சூதாடியதாக நபர்கள் கைது.. போலீசார் எச்சரிக்கை

143

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பணம் வைத்து சூதாடியதாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஓசூர் மாநகர பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.தகவலின் பேரில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ராம்நகர் பகுதியில் சூதாடி கொண்டிருந்த 8பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், அவர்களிடம் இருந்து 38ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார் 8பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் ஓசூர் மாநகரம் முழுவதும் போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of