திருச்சி நகை கடை கொள்ளையில் தொடர்புடையவர் கைது

453

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள லலிதா ஜூவல்லரியில் நேற்று (அக்டோபர் 2) மர்ம நபர்கள் சுவரில் துளைபோட்டு தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இவற்றின் மதிப்பு மொத்தம் 13 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டிருந்தது. கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். இந்நிலையில், திருவாரூரில் போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை மடக்கிபிடித்து விசாரித்தனர்.

அவர் நகைக்கடை கொள்ளையில் தொடர்புடையர் என தெரியவந்ததையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடன் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் கொள்ளையடித்த திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் (32) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரிடம் லலிதா ஜூவல்லரி எம்பளம் பொறித்த தங்க நகை சிக்கியிருப்பதாக தகவல் தெரிந்ததும் திருச்சியில் இருந்து தனிப்படை திருவாரூர்க்கு விரைந்து வந்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of