வீட்டில் இரு துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தவன் கைது

516

நாகர்கோவில் வடசேரி அருகே கீழ கலுங்கடியில் அருண் சாஜு என்பவனது வீட்டில் ஆயுதங்கள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை அடுத்து அவனது வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார், இரு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

தப்பி ஓடி தலைமறைவான அருண் சாஜூவை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். அருண் சாஜூ ஏற்கனவே கொலை, கொள்ளை வழக்குகளில் சிறையில் இருந்தவன்.

எனவே ரவுடிகளுடன் சேர்ந்து கொண்டு கொலை, கொள்ளைக்கு திட்டம் தீட்டி துப்பாக்கிகளை வாங்கி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of