மனைவியை பார்க்கச் சென்ற கனவனுக்கு கத்திக்குத்து!

337

மதுரை அருகே உள்ள காஞ்சரம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 25). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் அகிலேஸ்வரி என்பவரும் கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதில் கோபித்துக் கொண்டு அகிலேஸ்வரி தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.

சம்பவத்தன்று தனது மனைவியை பார்ப்பதற்காக கண்ணன், மாமனார் வீட்டுக்குச் சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் கண்ணனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மாமனார் கண்ணன், இவரது மனைவி செல்வி (39), உறவினர்கள் பஞ்சு (50), சத்யா (30) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Advertisement