விளாடிமிர் புதின் இன்று இந்தியா வருகை – ராணுவ தளவாடங்கள் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்து

529

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அரசு முறைப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். அவரது இந்த பயணத்தின் போது இருநாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.

இந்தியா – ரஷ்யா 19-வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா வருகிறார்.

மாநாட்டில் பங்கேற்கும் அவர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்தை நடத்த உள்ளார்.

மேலும் அதிபர் புதினின் இந்த பயணத்தின் போது, ரஷ்யாவிடமிருந்து 36ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

இருநாடுகள் இடையே மேலும் சில ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.