ஜெயலலிதா மரணம் – ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இன்றுடன் ஓராண்டு நிறைவு

621

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் அரசு செயலாளர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய காவல்துறை உயர் அதிகாரிகள், போயஸ் தோட்ட இல்ல பணியாளர்கள், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் அப்பல்லோ நிர்வாகிகள் என இதுவரையில் 100 பேரிடம் விசாரணையை நடத்தியுள்ளது.

இதனிடையே ஆணையம் அமைக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. முதலில் விசாரணைக்காக மூன்று மாத காலம் அவகாசம் அளித்த அரசு பின்னர் 6 மாதம் கால நீட்டிப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் இரண்டாவது முறையாக கால அவகாசம் வழங்கி ஆணைய விசாரணையை மேலும் நான்கு மாதங்கள் நீட்டித்து அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த கால நீட்டிப்பும் அடுத்த மாதம் 24 -ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அடுத்த ஒரு மாத காலத்திற்குள் விசாரணையை முடிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of