இதயம் செயல் இழந்த பிறகு ஜெயலலிதாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அறிக்கை கொடுத்தது எப்படி?

522

இதயம் செயல் இழந்த பிறகு ஜெயலலிதாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அறிக்கை கொடுத்தது எப்படி? என்று ஆறுமுகசாமி ஆணையம் எழுப்பிய கேள்விக்கு, அப்போலோ மருத்துவர் பதில் அளிக்க முடியாமல் திணறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையின் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் சுரேஷ் மாணிக்கவேல், இதய நோய் தடுப்பு சிகிச்சை மருத்துவர் பிரகாஷ்சந்த் ஜெயின் ஆகியோர் நேற்று ஆணையத்தில் ஆஜராகினர்.

அவர்களிடம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. மூச்சுத்திணறல் காரணமாகவே ஜெயலலிதா இறந்துள்ளதாக இறப்பு சான்றிதழில் கூறப்பட்டுள்ளதால், அவர் இறக்கும் வரை மூச்சுத்திணறல் பிரச்சினையை சரி செய்ய முடியவில்லையா என்று ஆணையம் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு மருத்துவர் சுரேஷ், ‘இதுபோன்ற பிரச்சினை சரி செய்யப்படக்கூடியது தான், ஆனால், ஜெயலலிதாவுக்கு கடைசி வரை சரியாகவில்லை’ என்று கூறியதாக தெரிகிறது.

அப்போது, இதயம் செயல் இழந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அறிக்கை கொடுத்தது எப்படி? என்று ஆணையம் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு பதில் அளிக்க முடியாமல் மருத்துவர் திணறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of