பாஜகவின் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து மரணம் – தொண்டர்கள் சோகம்

460

பாஜகவின் மூத்த தலைவர்களின் அடுத்தடுத்த மரணத்தால் அக்கட்சியின் தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் காலமாகியிருந்தார். இந்தச் சூழலில், தற்போது, பாஜகவின் மற்றொரு பிரபலமான அருண் ஜெட்லி காலமாகியுள்ளார் என்பது பாஜக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, ஜெட்லியின் மறைவைத் தொடர்ந்து, பாஜக தலைவர்கள் டெல்லிக்கு விரைந்துள்ளனர். ஹைதராபாத்தில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க சென்றிருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, தற்போது டெல்லி திரும்பிக் கொண்டிருக்கிறார்.

வளைகுடா நாடுகளில் பயணம் செய்து வரும் பிரதமர் மோடிக்கும் ஜெட்லியின் மரணம் குறித்து தெரிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி தமது பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புவது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of