அருண் ஜெட்லியின் உடலுக்கு இன்று இறுதி அஞ்சலி..!

262

முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெற உள்ளன.

பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண்ஜெட்லி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மதியம் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள்,பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இன்று பா.ஜ.க. தலைமையகத்திற்கு அருண்ஜெட்லி உடல் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். மாலை 4 மணியளவில் நடைபெறும் இறுதிச் சடங்கில் மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.