அருண் ஜெட்லியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

557

டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜெட்லிக்கு கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை.

இந்நிலையில் கடந்த 9-ம் தேதி மூச்சுத் திணறல் பிரச்சினைக்காக அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அனுமதிக்கப்பட்ட மறுநாளே மோசமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை தொடர்ந்து, அருண் ஜெட்லிக்கு உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை மத்திய அமைச்சர்கள் உட்பட பல்வேறு தலைவர்களும் சந்தித்து வருகின்றனர்.

இதனிடையே அருண்ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால், எக்மோ கருவி பொருத்தப்பட்டு டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.